Home
/
இலங்கை செய்தி
/
திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில் ஒளி விழா; ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பங்கேற்பு!!
திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில் ஒளி விழா; ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பங்கேற்பு!!
( வி.ரி.சகாதேவராஜா)
சொறிக்கல்முனை ஹோலிகுரோஸ்( மகா வித்தியாலய வருடாந்த ஒளி விழா பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி சிறியபுஸ்பம் தலைமையில் நேற்றுமுன்தினம் சிறப்பாக இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பொன்னையா, சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமார், பங்குத்தந்தை ஜீனோ சுலக்சன் அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் வலயக்கல்வி அலுவலகர்களான டிலுக்சன், அருட்சகோதரி பவித்ரா, வீரச்சோலை பாடசாலை அதிபர் சுதர்சன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், கல்வியல் கல்லூரிக்கு தெரிவான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களையும் பாராட்டி கௌரவித்து நினைவுச் சின்னங்கள் வழங்கி வைத்தனர்.
இறுதியில் நத்தார் தாத்தா வருகை நிகழ்வும் இடம்பெற்றது. இவ் நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.
திருச்சிலுவை மகா வித்தியாலயத்தில் ஒளி விழா; ஓய்வு நிலை ஆயர் ஜோசப் பங்கேற்பு!!
Reviewed by Thanoshan
on
11/25/2024 10:34:00 AM
Rating: 5
Reviewed by Thanoshan
on
11/25/2024 10:34:00 AM
Rating: 5




No comments