Column Left

Vettri

Breaking News

உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் வெள்ளிக்கிழமை மீண்டும் பணிப்புறக்கணிப்பு - ரயில் நிலைய அதிபர்களின் சங்கம் !!




 ரயில் நிலைய அதிபர்களின் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக கைவிடப்பட்டது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.

பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சில பிரச்சினைகளை அடிப்படையாக வைத்து புதன்கிழமை (30) மாலை முதல் இரவு 10 மணி வரை தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.


தமது கோரிக்கைக்கு இன்றைய தினத்திற்குள் உரிய தீர்வு வழங்கப்படாவிட்டால் வெள்ளிக்கிழமை (01) மீண்டும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். 

No comments