Column Left

Vettri

Breaking News

லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் கழிவு முகாமைத்துவ நிகழ்ச்சி முன்னெடுப்பு!!




 பாறுக் ஷிஹான்


லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவுனர் அல்லிராஜா சுபாஸ்கரனின் வழிகாட்டுதலின் கீழ் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பிரதேச சபையில் கழிவுகளை தரம் பிரித்தல் தொடர்பான விழிப்புணர்வும் கழிவு  தொட்டிகள் வழங்கும் வைபவமும்  சிறப்பாக நடைபெற்றது.


குறித்த விழிப்புணர்வூட்டும் செயற்த்திட்டம் அக்கரைப்பற்று  பிரதேச சபையின் செயலாளர் ஐ.இர்பான்   தலைமையில் பிரதேச சபை பொது மண்டபத்தில் பாடசாலை மாணவர்களுக்கான திண்மக் கழிவுப்பொருட்களை தரம் பிரித்து வகைப்படுத்தி சேகரிக்கும் பணிகள் தொடர்பில் விரிவாக விளக்கவுரைகள் வழங்கப்பட்டன.


 இதில்  திண்மக் கழிவு தொடர்பான முன்மொழிவாக உக்கும் பொருட்கள் உக்காத பொருட்கள் சூழல் மாசடைவு சூழல் தாக்கம் உள்ளிட்ட பல தெளிவுகளை அக்கரைப்பற்று  பிரதேச சபையின்  பொதுச் சகாதார பரிசோதகர் பஹ்மி வழங்கியதுடன் அக்கரைப்பற்று அல் பாயிஷா மகா வித்தியாலயம் மற்றும் ரஹிமியா வித்தியாலயம் மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.அக்கரைப்பற்று  பிரதேச சபை  எல்லைக்குட்பட்ட பாடசாலைகளுக்கான கழிவுத் தொட்டிகளும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பணியாளர்கள்  தன்னார்வ தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


லைக்கா ஞானம் அறக்கட்டளையின்  ஊடாக நாடளாவிய ரீதியில்  இவ்வாறான கழிவு முகாமைத்துவ விழிப்பணர்வு நிகழ்வகள்  ஒழுங்கமைக்கப்பட்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.









No comments