இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு!!!
பாறுக் ஷிஹான்
பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில் அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ருவான் சேனாரத்ன ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் குறித்த வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த மே மாதம் இடம்பெற்றது.
இதன் பின்னர் குறித்த வீடு கணவனை இழந்து 9 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வாழ்ந்து வந்த பயனாளியான திருமதி துரைராசா சுரேஜினிக்கு தமிழ் முஸ்லீம் தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன் இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உள்ளிட்டோர் வீட்டுப் பெறுநருக்கான சாவியும் தகுதியான குடும்பத்திற்கு வீட்டு உபயோகப் பொருட்களையும் அன்பளிப்புச் செய்தார்.அத்துடன் வீட்டு நிர்மாண பணியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்து எதிர்கால சந்ததியினருக்கு அழகிய நாட்டை உருவாக்கி எம்முடன் கடமையாற்றும் பொதுமக்களுக்கும் சட்ட ஒழுங்கையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் அவர்களின் இயல்பு வாழ்க்கை உயர்த்தப்பட்டுள்ளது.இராணுவத்தி ன் 75 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு திருமதி துரைராசா சுரேஜினி என்ற ஒரு குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டது.அத்துடன் இந்த வீட்டை நிர்மாணிப்பதன் மூலம் முழு சிவில் சமூகத்திடம் இலங்கை இராணுவத்தின் நம்பிக்கை மரியாதை மற்றும் நல்லெண்ணத்தை மேலும் மேம்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என இராணுவத்தின் உயர் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.ஆர்.எஸ். சந்திரசேன அம்பாரை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு முகாம் இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுக்கப்பட்டு உத்தியோக பூர்வமாக இன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தினால் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பத்துக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொடுக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டம் இலங்கை இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின் ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன வழிகாட்டலில் அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ருவான் சேனாரத்ன ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் குறித்த வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த மே மாதம் இடம்பெற்றது.
இதன் பின்னர் குறித்த வீடு கணவனை இழந்து 9 வயது மகள் மற்றும் 6 வயது மகனுடன் வாழ்ந்து வந்த பயனாளியான திருமதி துரைராசா சுரேஜினிக்கு தமிழ் முஸ்லீம் தனவந்தர்களின் ஒத்துழைப்புடன் இராணுவத்தினருடைய கட்டுமான பங்களிப்புடன் இந்த வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி கேணல் தனிக பதிரட்ன மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் உள்ளிட்டோர் வீட்டுப் பெறுநருக்கான சாவியும் தகுதியான குடும்பத்திற்கு வீட்டு உபயோகப் பொருட்களையும் அன்பளிப்புச் செய்தார்.அத்துடன் வீட்டு நிர்மாண பணியில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நாட்டில் இடம்பெற்ற கொடூரமான பயங்கரவாதத்தை தோற்கடித்து எதிர்கால சந்ததியினருக்கு அழகிய நாட்டை உருவாக்கி எம்முடன் கடமையாற்றும் பொதுமக்களுக்கும் சட்ட ஒழுங்கையும் பிரதேச ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் அவர்களின் இயல்பு வாழ்க்கை உயர்த்தப்பட்டுள்ளது.இராணுவத்தி
மேலும் இந்நிகழ்வில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.ஆர்.எஸ். சந்திரசேன அம்பாரை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இராணுவத்தினரால் பெண் தலைமை தாங்கும் குடும்பமொன்றுக்கு வீடு அன்பளிப்பு!!!
Reviewed by Thanoshan
on
10/09/2024 10:24:00 AM
Rating: 5
Reviewed by Thanoshan
on
10/09/2024 10:24:00 AM
Rating: 5
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
No comments