Column Left

Vettri

Breaking News

துறைநீலாவணை சென்றல் விளையாட்டு கழகம் நடாத்திய நாகேந்திரன் ஞாபகார்த்த சம்பியன் கிண்ணத்தை கல்முனை பெஸ்ட் இலவன் அணி சுவீகரித்தது.




 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

 சென்றல் விளையாட்டுக்கழகம் நடாத்திய
64 அணிகளை உள்ளடக்கிய  அணிக்கு 8 பேர் கலந்து கொண்ட 5 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட மின்னொளியிலான நாகேந்திரன் ஞாபகார்த்த கிண்ண கிறிக்கட் சுற்று தொடரில் பல முன்னணி விளையாட்டுக்  கழகங்களை வெற்றி கொண்டு  கால் இறுதி போட்டியில் காந்தி ஸ்டார் விளையாட்டு கழகத்தினையும் அரை இறுதி போட்டியில் ஒலுவில் ஈஸ்டன் வொறியர்ஸ்  விளையாட்டு கழகத்தினையும் இறுதிப் போட்டியில் அக்கரைப்பற்று ஜொலி போய்ஸ் விளையாட்டு கழகத்தினரையும் வெற்றி கொண்டு சம்பியன் கிண்ணத்தை கல்முனை பெஸ்ட் இலவன் அணி சுவீகரித்தது.




சம்பியன் அணிக்கு 50000/-ரூபா பணபரிசும்   வெற்றிக்கிண்ணமும் வழங்கப்பட்டது.

துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இறுதி போட்டியின் சிறப்பாட்டக்காரராக  கல்முனை பெஸ்ட் இலவன் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் றஸா தெரிவு செய்யப்பட்டதுடன் சுற்று தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், அதி கூடிய ஆறு ஓட்டம் பெற்ற வீரராகவும் சகல துறை ஆட்டக்காரர்  அப்லால் காரியப்பர் தெரிவு செய்யப்பட்டார்.

No comments