Home
/
இலங்கை செய்தி
/
சிரேஷ்ட பிரஜைகளுக்கு சேவை நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறு சாய்ந்தமருது ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள்!!
சிரேஷ்ட பிரஜைகளுக்கு சேவை நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறு சாய்ந்தமருது ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள்!!
அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலுமுள்ள முதியோர் மற்றும் சிரேஸ்ட பிரஜைகளுக்கு தமது தேவையை நிறைவேற்றுவதற்காக வரும் சேவை நிலையங்களில் முன்னுரிமை வழங்கி அவர்களின் தேவைகளை விரைவாக நிறைவேற்றி கொடுக்குமாறு சாய்ந்தமருது ஓய்வுதியர் சங்கம் கேட்டுள்ளது.
தமது வாழ் நாளில் பலவிதமான திணைக்களங்களிலும் பாடசாலைகளிலும் சேவையினை செய்து தற்போது வயது சென்று ஓய்வான நிலமையில் தமக்கேற்படும் தேவையை புர்த்தி செய்யும் வகையில் அரச திணைக்களங்கள் , பிரதேச செயலகங்கள் , தபாலகம் , வைத்தியசாலை , பொலிஸ் நிலையம் , நூலகம் , இலங்கை மின்சார சபை மற்றும் வங்கிகளுக்கு செல்லும் போது நீண்ட நேரம் வரிசைகளில் காத்திருக்கு வேண்டியிருப்பதால் பலவிதமான கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இதனால் முதியோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கு மதிப்பளித்து அவர்களின் தேவைகளை உரிய வேளைக்கு நிறைவேற்றிக் கொடுக்க திணைக்கள அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டுமென ஓய்வுதியர் சங்கம் கேட்டுள்ளது.
இதே வேளையில் சில சேவை நிலையங்களில் முதியோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கென தனியான பிரிவு ஆரம்பிகப்பட்டுள்ளமைக்கு தமது நன்றியினையும் ஓய்வுதிர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதே வேளையில் சில சேவை நிலையங்களில் முதியோர் மற்றும் சிரேஷ்ட பிரஜைகளுக்கென தனியான பிரிவு ஆரம்பிகப்பட்டுள்ளமைக்கு தமது நன்றியினையும் ஓய்வுதிர் சங்கம் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரஜைகளுக்கு சேவை நிலையங்களில் முன்னுரிமை வழங்குமாறு சாய்ந்தமருது ஓய்வூதியர் சங்கம் வேண்டுகோள்!!
Reviewed by Thanoshan
on
9/19/2024 04:40:00 PM
Rating: 5
Reviewed by Thanoshan
on
9/19/2024 04:40:00 PM
Rating: 5
.jpeg)
No comments