Column Left

Vettri

Breaking News

வீடுகளுக்கு பேரணியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டத்தில் இடமளிக்கவில்லை!!




 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஐந்து பேர் மட்டுமே வீடுகளுக்குச் செல்ல முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (08)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்த அவர், வீடுகளுக்கு பேரணியாகச் சென்று துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்க சட்டம் இடமளிக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.


மேலும் கருத்து தெரிவித்த அவர்,

வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்படுகின்றது.  தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களில் மட்டுமே ஸ்டிக்கர்களை ஒட்டமுடியும்.

மேலும், சம்பந்தப்பட்ட வேட்பாளரின் வாகனத்தை தவிர, ஏனைய வாகனங்களில் ஸ்டிக்கர் அல்லது வேறு பிரசாரங்களை காட்சிப்படுத்துவது சட்டவிரோதமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.

No comments