Column Left

Vettri

Breaking News

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இரு தேசிய விருதுகள்






(அஸ்ஹர் இப்றாஹிம்)


உலக சுகாதார நிறுவனத்தினால் வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு  பணியகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நிகழ்வு  (7) கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு, நோயாளிகள் பாதுகாப்பு சம்பந்தமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திய வைத்தியசாலைகளுக்கிடையில் இடம்பெற்ற போட்டியில் இரு சிறப்பு விருதுகள் கிடைத்துள்ளன.


இருநூற்றுக்கும் மேற்பட்ட மத்திய மற்றும் மாகாண சுகாதார நிறுவனங்களுக்குள் அகில இலங்கை ரீதியில் இடம்பெற்ற போட்டியில் வட மாகாணத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை மாத்திரமே இந்த சிறப்பு விருதை வென்றுள்ளமை குறிப்பிட்டதக்கது.

இலங்கைக்கான பிரதிநிதி வைத்தியர் அலோகா சிங்கா, சுகாதார அமைச்சின் செயலாளர்  வைத்தியர் பாலித மஹிபால மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஆஸாத் எம் ஹனீபா விருதுகளை பெற்றுக்கொண்டார்.

No comments

Subscribe Us