யாழ்பாணம்,மானிப்பாய் இந்து கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களுக்கு மகுடம் சூட்டும் "வாழும்போதே வாழ்த்துவோம் நிகழ்வு"
(அஸ்ஹர் இப்றாஹிம்)
யாழ்ப்பாணம் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் 1989 கா.பொ.த. சாதாரண தரம், 1992 க.பொ.த.உயர்தரம் கற்ற மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களைக். கௌரவப்படுத்தும் " வாழும்போதே வாழ்த்துவோம் " கௌரவிப்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை மானிப்பாய் இந்துக் கல்லூரியின் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லூரி அதிபர் துரைரட்ணம் திலீப்குமார் கலந்து கொண்டார்.
இம்மாணவர்களினால் கல்லூரிக்கு தங்களின் நினைவாக கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன், 10 இலட்சம் ரூபா பணமும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments