Column Left

Vettri

Breaking News

9ஆவது ஜனாதிபதியின் பதவியேற்பினை முன்னிட்டு ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனை!!






(பாறுக் ஷிஹான்)


இலங்கையின் 9 ஆவது புதிய ஜனாதிபதியின் பதவியேற்பினை  முன்னிட்டு பல சமூக நலப்பணிகளும் சமய நிகழ்வுகளும் நாடு முழுவதிலும் இன்று  இடம்பெற்றன.
 
தேசிய மக்கள் சக்தி (NPP)யில்   ஜனாதிபதி   வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற   அனுர குமார  திசாநாயக்க புதிய 9 ஆவது ஜனாதிபதியாக இன்று பதவியேற்றுக் கொண்டார்.

குறித்த நிகழ்வினை முன்னிட்டு அவருக்கும் புதிய அரசாங்கத்தின் எதிர்கால வெற்றிக்கும்  ஆசி வேண்டி விஷேட துஆ பிராத்தனையொன்று தேசிய மக்கள் சக்தி கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா  தலைமையில் சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜூம்மா  பள்ளிவாசலில் அஸர் தொழுகையின் பின்னர் இன்று  இடம்பெற்றது .

இந் நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் ஒலுவில் , கல்முனை, சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை, நற்பிட்டிமுனை, மாளிகைக்காடு, பெரிய நீலாவணை , உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்   உட்பட பிரதேச இளைஞர்கள் இதில் கலந்து கொண்டனர்

 அத்துடன் கல்முனைத் தொகுதி அமைப்பாளர் ஆதம்பாவா பள்ளிவாசலின் நிர்வாகிகள் உட்பட  தேர்தலில் ஒத்துழைப்பு வழங்கிய   அனைவருக்கும் நன்றி கூறி உரையாற்றினார்.

இறுதியாக விசேட துஆ பிராத்தனையுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments