Vettri

Breaking News

கல்முனை - அம்பாறை பிரதான வீதியில் வாகன விபத்து 14 வயது மாணவி உயிரிழப்பு







(அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை - அம்பாறை பிரதான வீதியில் மாவடிப்பள்ளி பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் தரம் 9 இல் கல்வி பயிலும் சம்மாந்துறையைச் சேர்ந்த  14 வயதுடைய மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். 


தனது தந்தையின் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தனியார் பஸ்ஸொன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து நடந்த இடத்திலிருந்து பஸ் சாரதி தப்பி ஓடியதாகவும் காரைதீவு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாகவும் காரைதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்து சம்பந்தமாக காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments