Column Left

Vettri

Breaking News

தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும்!!




 தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடியை பயன்படுத்தினால் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும், இது தொடருமானால் இன்னும் சில நாட்களில் தேசிய கீதம் கட்சியின் பாடலாக மாறும் எனவும் தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு பெப்ரல் அமைப்பின் அனுசரணையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசியல்வாதிகளை பார்க்கிறோம் அவர்கள் இல்லாமல் தேர்தல் இல்லை. தேசியக் கொடியின் பெருமை இன்று பள்ளத்துக்கு  போய்விட்டது. எனவே, தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்த வேண்டாம்.

இப்போது கிரிக்கெட் போட்டிகளில், தேசியக் கொடியை சுற்றிக் கொண்டு, ஒரு கையில் மது பாட்டிலை வைத்துக் கொண்டு நடனமாடுவதால், அரசியல் தத்துவம் இல்லை. நாட்டின் அபிவிருத்திப் பணிகளை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை ” என்றார்.  

No comments