Column Left

Vettri

Breaking News

யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதி பாலியல் துஸ்பிரயோகம் !!




 யாழில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுகவீனம் காரணமாக குறித்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தவேளையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தாயின் சகோதரியினது கணவர் மற்றும் இரு இளைஞர்கள் என மூன்று பேர் இணைந்து யுவதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளனர். சில தடவைகள் கூட்டு வன்புணர்வுக்கும் யுவதியை உட்படுத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் யுவதியின் சிறிய தந்தை உள்ளிட்ட மூவரை கைது செய்தனர்.

விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் மூவரையும் முற்படுத்தியதையடுத்து, பதில் நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


No comments