அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸும் ரணிலுக்கு ஆதரவு!!!
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் வை.எஸ். மொஹமட் ஷியா தெரிவித்துள்ளார்.
போராட்டங்களின் பின்னர் நாட்டை பொறுப்பேற்க முன்வந்த ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பதால்,கட்சியின் ஆதரவை அவருக்கு வழங்க தீர்மானித்ததாகவும் அவர் கூறினார்.
கட்சியின் இந்த தீர்மானத்தை ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
No comments