Vettri

Breaking News

வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!!




 பிரபல வர்த்தகரான 'கிளப் வசந்த' என்றழைக்கப்படும்  வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் துலான் சஞ்சயிடமிருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலையாளிகளுக்காக காத்திருந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து தனது சகோதரனும் உளவு பார்த்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விசாரணையில் அவருக்கும் கொலைத் திட்டத்தில் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் பச்சை குத்துவதற்கு படித்திருந்தாலும், ஒரு ஸ்தாபனத்தை திறக்க முடியாத நிலையில், பாதாள உலக உறுப்பினர் ஒருவர் அவருக்கு 16 இலட்சம் ரூபாவை கொடுத்து இந்த நிறுவனத்தை ஆரம்பிக்க ஆதரவளித்தார்.

இதன் திறப்பு விழாவுக்கு சுரேந்திர வசந்த பெரேராவை அழைத்து வர வேண்டும் என்பது நிபந்தனையாகும் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது. .

இந்த கொலையுடன் தொடர்புடையவர்களில் பெரும்பாலானோர் பலப்பிட்டிய மற்றும் பெலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அறியமுடிகின்றது.

No comments