Column Left

Vettri

Breaking News

150 கிலோவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி கட்டமைப்பு ஐனாதிபதியால் திறப்பு!!




 வரலாற்றில் பிரசித்தி பெற்ற வணிக மற்றும் பொருளாதார மையமாக அநுராதபுர நகரத்தை மீண்டும் உலகப் பிரசித்தமான நகரமாக மாறுவதற்குத் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

தஞ்சாவூர், மதுரை மற்றும் காஞ்சிபுரம் நகரங்களைப் பற்றி இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஆனால் அதன் நான்காவது நகரமாக கருதப்பட வேண்டிய அநுராதபுரத்தின் முன்னேறத்துக்கான ஏற்பாடுகள் இதுவரையில் செய்யப்படவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


அநுராதபுரம் ஸ்ரீ மகா போதிய வளாகத்தில் எல்.ரி.எல். வர்த்க குழுமத்தினால் அமைக்கப்பட்ட 150 கிலோவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய சூரிய சக்தி கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று அநுராதபுரம் புனித நகருக்கு சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சியம் மகா நிகாயவின் மல்வத்து பீட பிரதம சங்கநாயக்கரும அட்டமஸ்தான விகாராதிபதியுமான வண. பல்லேகம ஹேமரதன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

அதனையடுத்து ஜய ஸ்ரீ மகா போதியை தரிச்சுத்து ஆசி பெற்றுகொண்ட ஜனாதிபதி சூரிய சக்தி கட்டமைப்பை திறந்து வைக்கும் நிகழ்விலும் கலந்துகொண்டார்.

அதனையடுத்து அனுராதபுரம் புனித நகருக்கு வருகைத் தந்திருந்த மக்களோடும் சிநேகபூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்துகொண்டார்

No comments