Column Left

Vettri

Breaking News

IMF இடமிருந்து இலங்கைக்கு மகிழ்ச்சியான தகவல்!!




 சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இலங்கையின் வேலைத்திட்டத்தின் 2 ஆவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், அனைத்து இலங்கையர்களுக்கும் வளமான எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கும் எங்களின் அர்ப்பணிப்புக்கு இந்தச் சாதனை ஒரு சான்றாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்

No comments