Column Left

Vettri

Breaking News

ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பு!!




 ஜனாதிபதித் தேர்தலுக்கு தயாராகுமாறு, தேர்தல்கள் ஆணைக்குழுவினால் பல்வேறு அரச நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச அச்சகம், பொலிஸ், இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்பில் புள்ளிவிபர அறிக்கையைத் தயாரிக்குமாறும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments