Column Left

Vettri

Breaking News

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் இரு இளைஞர்கள் பலி!!




 தெய்யந்தர, பல்லேவெல பிரதேசத்தில் வீடொன்றின் மீது நேற்று (01) இரவு மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தேனகம பிரதேசத்தில் வசித்து வந்த 20 மற்றும் 27 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தெய்யந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments