Column Left

Vettri

Breaking News

தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சாரதி கைது !





 ரயில் தண்டவாளத்தில் பேருந்தை இயக்கிய சம்பவம் தொடர்பில் அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்குரிய சாரதி, எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

கொழும்பு - எம்பிலிப்பிட்டிய  தனியார் பேருந்து ஒன்றின் சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று புவக்பிட்டியவில் உள்ள களனிவெளி ரயில் மார்க்கத்தில் சாரதி, பேருந்தை இயக்கிச் செல்லும் பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்குரிய சாரதியுடன் சம்பந்தப்பட்ட பேருந்தும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

No comments