Column Left

Vettri

Breaking News

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 13 ரூபாவால் குறைப்பு!!




 நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.அதேபோல், ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 317 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

மேலும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 202 ரூபாய் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


இந்நிலையில் சூப்பர் டீசல் மற்றும் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலைகளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.


இதேவேளை சினோபெக் நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 355 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டு 314 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

No comments

Subscribe Us