Column Left

Vettri

Breaking News

போதிய வைத்தியர்கள் இல்லாததால் சேவைகளை பேணுவதில் பாரிய சவால்!!




 போதிய வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால், நாடு முழுவதிலும் உள்ள பல வைத்தியசாலைகளில் நோயாளர் பராமரிப்பு சேவைகளை பேணுவது பாரிய சவாலாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் கடுமையான வைத்தியர் பற்றாக்குறை நிலவுகின்றது . இதேவேளை 1390 வைத்தியர்கள் அடங்கிய குழு மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியை நிறைவு செய்த போதிலும், அவர்களது நியமனம் 8 மாதங்களாக தாமதமாகியுள்ளது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

ஆறு வருடங்களாக அங்கீகரிக்கப்பட்ட வைத்தியர்களின் எண்ணிக்கை புதுப்பிக்கப்படவில்லை எனவும், நாடு பூராகவும் வைத்தியர்கள் பற்றாக்குறை நிலவுகின்ற போதும் புதிய வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்படாமை பாரதூரமான பிரச்சினை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments