Vettri

Breaking News

இணையத்தளங்களில் பகிரப்படும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை




 ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை சமூக ஊடகங்கள் அல்லது இணையத்தளங்களில் பதிவேற்றுபவர்களை அடையாளம் காண்பதற்காக விசேட நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் 18 வயதிற்கு குறைந்த ஆண் மற்றும் பெண் பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிக் காட்சிகளை பகிர்பவர்களுக்கு எதிராகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் சிறார்களுடன் தொடர்புடைய புகைப்படங்களை வெளியிட்ட 10 சம்பங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆபாச புகைப்படங்கள்

இதன்படி, கூகுள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தளங்களில் பகிரப்படும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகள்: எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | Punishment For Sharing Obscene Photos

கைதானவர்கள் 20 வயதிற்கும் குறைவானவர்கள் என்றும் 10 வயதிற்கும் குறைவான பாடசாலை செல்லும் மாணவிகளின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments