Vettri

Breaking News

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் திருச்சிலுவைப் பாதை!!!




 கிழக்கு மாகாணத்திலுள்ள  வராற்றுச் சிறப்புமிக்க பழம்பெரும் திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் இயேசுவின் பாடுகளை நினைவுகூரும் திருச்சிலுவைப் பாதை பெரிய வெள்ளிக்கிழமையான இன்று (29_03_2024) சிறப்பாக இடம்பெற்றது.










இந்நிகழ்வில் கலந்து கொண்ட கிறிஸ்தவ பக்தர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் சிலுவைகளை சுமந்தவாறு 6ஆம் கொளனி அந்தோனியார் ஆலயம் மற்றும் வீரமுனை சந்தி ஆகியவற்றிலிருந்து நடைவணி மேற்கொண்டு சம்மாந்துறை சொறிக்கல்முனை பிரதான வீதிவழியாக திருத்தலத்தை வந்தடைந்தனர்.

சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் பங்குத் தந்தை சுலக்சன் அடிகளாரின்  தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் உள்ளிட்ட நாட்டின் நாலாபுறமிருந்தும் ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றினார்கள்.

இதற்கமைவாக இன்று இரவு 07.00மணிக்கு இயேசுவின் பாடுகளை  திருப்பாடுகளின் காட்சிகள் திருத்தல வளாகத்தில் (பாஸ்கா) இடம்பெறவுள்ளது.

இயேசு நாதர் அறையப்பட்டு மரணித்த திருசிலுவையின் ஒரு பகுதி இந்தியாவிலுள்ள கோவை நகரிலிருந்து எடுத்துவரப்பட்டு சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தில் பாதுகாக்கப்பட்டு வருவது இவ் ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.


செய்தியாளர்

க.டினேஸ்

No comments