Column Left

Vettri

மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க!!




 எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க,

"மதுவின் விலையை குறைக்க வேண்டும். பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். எல்லாவற்றையும் குறைக்க வேண்டும். குறிப்பாக மதுபானத்தின் விலையை புத்தாண்டுக்கு முன்னர்  குறைக்க எதிர்ப்பார்த்துள்ளோம். இவ்வளவு நாட்களாக நாங்கள் ஜனரஞ்சகமான முடிவுகளை எடுக்கவில்லை. எடுக்கவும் மாட்டோம், நாங்கள் ஜனரஞ்சக முடிவுகளை எடுக்கச் சென்றபோதுதான் கடந்த காலத்தில் டொலர் 200 ரூபாவுக்கு சென்று  இந்த  நாடு சீரழிந்தது ஞாபகம் உள்ளதுதானே. அதனால்தான் ஜனரஞ்சக முடிவுகள் எடுக்கப்பட மாட்டாது."


No comments