Column Left

Vettri

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 8 கையடக்கத் தொலைபேசிகள், 11 சிம் அட்டைகள் மீட்பு!!!




 


கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சிம் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவினரால் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் ஜி1 பிரிவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே   8 கையடக்கத் தொலைபேசிகளும் 11 சிம் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட  கையடக்கத் தொலைபேசிகளில் மூன்றரை இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒனறும் காணப்பட்டுள்ளது. இது தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments