Column Left

Vettri

Breaking News

வழிபாட்டு தலத்திற்கு சென்றபேரூந்து விபத்தில் 37 பேர் காயம் - ஒருவர் பலி!!




 நெல்லிகலை சர்வதேச பௌத்த மத்திய நிலையத்திற்கு வழிபாடு செய்வதற்காக 38 பக்தர்களுடன் பயணித்த பேரூந்து  ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சாரதி உட்பட 37 பேர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்தார்.

பேராதனை கொப்பேகடுவ சந்தியில் யஹலதன்ன பிரதேசத்தில்  நேற்று (16) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பக்தர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து நெல்லிகலையில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த நிலையில் பேருந்தின் சாரதியால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சுமார் 15 மீற்றர் சரிவான வீதியில் சறுக்கிச் சென்று மரமொன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் சாரதி உட்பட 38 பேர் காயமடைந்து, பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விபத்தில் ஹல்பொல, பூண்டுலோயா பகுதியைச் சேர்ந்த 79 வயதான ஒருவரே மரணித்தார்.

காயமடைந்தவர்களில் இருவர் ஆபத்தான நிலையில் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


No comments