Column Left

Vettri

Breaking News

கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவோருக்கு முக்கிய அறிவித்தல்!!





 கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும்  தமது சிம் அட்டையை முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் பணிப்பாளர் இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தற்போது நீங்கள் பயன்படுத்தாத கையடக்கத் தொலைபேசிகளில்  உங்கள் பெயரில் சிம் அட்டை பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க சிம் அட்டையின் நிறுவன முகவர்களுடன் தொடர்பு கொண்டு சரிபாருங்கள்.

உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் பதிவுசெய்திருப்பின் அவற்றை உடனடியாகத் துண்டித்துக்கொள்ளுங்கள்.

உங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணின் கீழ் உங்களுக்குத் தெரியாமல் சிம் அட்டைகள் வழங்கப்பட்டிருந்தால், அவற்றின் இணைப்பைத் துண்டிப்பது மிகவும் முக்கியம் என்றார்.

No comments