Column Left

Vettri

Breaking News

விமான சேவையின் தாமதம் தொடர்பில் மன்னிப்புக் கோரும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம்!!!






 ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில்  இன்று ஞாயிற்றுக்கிழமை  (25) ஏற்பட்ட  தாமதங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.   

தற்காலிக மற்றும் திட்டமிடப்படாத செயற்பாடுகள் காரணமாக இந்த தாமதங்கள் ஏற்பட்டதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையினாலும் இது ஏற்படவில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.தாமதத்தினால் ஏற்பட்ட  அசௌகரியங்களுக்கு அனைத்து பயணிகளிடமும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மன்னிப்பு கோருவதாகவும் அந்த அறிக்கயைில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.அவ்வாறானதொரு நிலை மீண்டும் ஏற்படாத வகையில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் செயற்படும் என்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments