Vettri

Breaking News

துப்பாக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரிப்பு!




 குற்றச்செயல்கள் போதைப்பொருள் குற்றங்களிற்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ள போதிலும் துப்பாக்கிசூட்டு   சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யுக்தியவின் முதல் மாதத்தில் துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் குறைவடைந்திருந்த போதிலும் அவை மீண்டும்அதிகரிக்கதொடங்கியுள்ளன.


திட்டமிடப்பட்ட குற்றங்களிற்கு எதிரான யுக்திய நடவடிக்கை தீவிரமடைந்துள்ள அதேவேளை சமீபத்தைய துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் குறித்து கரிசனைகள் அதிகரித்துள்ளன.

துப்பாக்கியை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன என தெரிவிக்கும் பொலிஸ் அறிக்கைகள் இதன் காரணமாக அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

ஜனவரி பத்தாம் திகதிக்கும் பெப்ரவரி பத்தாம் திகதிக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகத்தினால் பத்துபேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்து துப்பாக்கி பிரயோகங்களினால் பலர் காயமடைந்துள்ளனர் அதேவேளை இரண்டு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் எவரும் காயமடையவில்லை என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் குற்றச்செயல்களிற்கு எதிராக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு டிசம்பர் மாதம் யுக்திய நடவடிக்கையை ஆரம்பித்தது.யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்தில் குற்றச்செயல்கள் 11 வீதம் வீழ்ச்சியடைந்தன என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் கடந்த சில வாரங்களில் கொழும்பு காலி போன்ற நகரங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த சம்பவங்கள் காரணமாக குற்றவாளிகள் என தெரிவிக்கப்படுபவர்களும் அப்பாவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ஜனவரி 22ம் திகதி பெலியத்தையில் இடம்பெற்ற சம்பவம் குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவத்தில் அரசியல் கட்சியின் தலைவர் சமன்பெரேரா உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.குற்றவாளிகள் கும்பலொன்று மேற்கொண்ட தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டனர்என்ற சந்தேகம் நிலவுகின்றது.

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் போதைப்பொருள் குற்றவாளிகளின் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு யுக்திய நடவடிக்கையை ஆரம்பித்துள்ள பொலிஸார் அதிகரித்த பொலிஸ் பிரசன்னம்காணப்படுகின்றது  இலக்குவைக்கப்பட்ட  சோதனை நடவடிக்கைகள் கைதுகள் இடம்பெறுகின்றன எனவும் தெரிவித்துள்ளனர்.

டிசம்பர் 17 ம் திகதி முதல் பொலிஸார் 60,000க்கும் அதிகமானவர்களை கைதுசெய்துள்ளதுடன் ஆயுதங்களையும் போதைப்பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 17 ம் திகதியுடன் இரண்டு மாதங்கள் பூர்த்தியாகவுள்ள நிலையில் அதிகாரிகள் 7733 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களையும் 726 மில்லியன் பெறுமதியான சட்டவிரோத சொத்துக்களையும் கைப்பற்றியுள்ளனர்.

குற்றச்செயல்களைகட்டுப்படுத்துவதையும் பொதுமக்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதையும் நோக்கமாக கொண்டே யுக்திய நடவடிக்கை முன்னெடுக்கப்பகின்ற போதிலும் அதிகரிக்கும் துப்பாக்கி பிரயோகங்கள் அதிகார துஸ்பிரயோகத்திற்கான வாய்ப்புகள் சந்தேகநபர்கள் குறித்து உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாமை குறித்து விமர்சகர்கள் கவலை கொண்டுள்ளனர்.

யுக்திய நடவடிக்கை குறித்த சுயாதீன கண்காணிப்பு மேற்பார்வை அவசியம் சட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவேண்டும் குற்றத்தை கையாற்வதில் சமநிலையான அணுகுமுறை அவசியம் எனவும் மனித உரிமை அமைப்புகள் தெரிவிக்கின்றன.

எனினும் போதைப்பொருள் குற்றங்களிற்கு எதிரான நடவடிக்கைகளின் போது சிறிய குற்றவாளிகளே இலக்குவைக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுவதை பதில் பொலிஸ்மா அதிபர் நிராகரித்துள்ளார்.யுக்திய நடவடிக்கைகளின் போதுபெருந்தலைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர்தெரிவித்துள்ளார்.

இதேவேளைசமீபத்தைய துப்பாக்கி பிரயோகத்துடன் தொடர்புபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் சட்டவிரோத ஆயுதங்களை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என  பொலிஸ்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத ஆயுதங்கள் வெடிபொருட்கள் குறித்த விபரங்களை வழங்குபவர்களிற்கு சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கஉள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பல துப்பாக்கிசூட்டு சம்பவங்களிற்கு தனிப்பட்ட பகையே காரணம் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்

No comments