Column Left

Vettri

Breaking News

சாய்ந்தமருதில் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிரமதானம்!!

















 பாறுக் ஷிஹான்


76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சிரமதானமானது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக்   பணிப்புரைக்கு அமைவாக நிதி உதவியாளர் ஏ.சி. முஹம்மட், நிர்வாக கிராம உத்தியோகஸ்தர் எம்.எஸ்.எம். நளிர் ஆகியோரின் ஒழுங்குபடுத்தலிலும், கல்முனை மாநகர சபையின் மேற்பார்வையாளர் யூ.கே. காலித்தீனின் மேற்பார்வையிலும் இடம்பெற்றது.
இதில் பிரதேச செயலகத்தின் கிராம சேவை உத்தியோகஸ்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள், செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆகியோருடன் கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் ஊழியர்களும் சமூர்த்தி பயணாளிகளும் கலந்து கொண்டு சிரமதானப் பணியில் ஈடுபட்டனர்.

No comments