Column Left

Vettri

Breaking News

'யுக்திய' நடவடிக்கையின் 733 பேர் கைது!





நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் விசேட சோதனை நடவடிக்கையின் கீழ், இன்று அதிகாலை 12.30 உடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 733 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 589 பேரும், குற்றப்பிரிவுக்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் உள்ள 144 பேரும் அடங்குவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கைதானவர்களில் 4 பேர் புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகத்தினால் தேடப்படும் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள 8 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்புகளின் போது 130 கிராம் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

No comments