Vettri

Breaking News

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் குழப்பம்; 7 மாணவர்கள் கைது!!




 


சப்ரகமுவ பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய 7 மாணவர்கள் இன்று (12) கைது செய்யப்பட்டு பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இப்பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் வருடத்தில் கல்வி பயிலும் ஒரு மாணவி மற்றும் இரண்டு மாணவர்கள் இதே பீடத்தின் சில சிரேஷ்ட மாணவர்களால் சில தினங்களுக்கு முன் தாக்குதலுக்கு உள்ளாகி பலாங்கொடை மற்றும்பம்பஹின்ன வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சில தினங்களுக்கு முன் இப்பல்கலைக்கழக சிற்றுண்டிச்சாலையில் உணவு அருந்திக் கொண்டிருந்தவேளையில் விளக்குகளை அணைத்துப் பொல்லுகள் மற்றும் ஆயுதங்களால் தாம் தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்துக்கிணங்க இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பம்பஹின்ன பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.


No comments