Column Left

Vettri

Breaking News

58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் கைது!!




 சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்டவர் விமான நிலையத்தில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபடும் வெயாங்கொடை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணாவார்.  

சந்தேக நபர் விமான நிலைய புறப்படும் முனையத்தில் வைத்து கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள்  தடுப்பு  பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

No comments