500 ரூபாவை தாண்டியது நாடங்காயின் விலை!!
பாறுக் ஷிஹான்
சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் 1 கிலோ நாடங்காயின் சில்லறை விலை 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை, கல்முனை, நற்பிட்டிமுனை, நாவிதன்வெளி, நிந்தவூர், சம்மாந்துறை, பகுதிகளில் நாடங்காயின் விற்பனை ஏட்டிக்கு போட்டியாக எந்தவொரு விலை நிர்ணயம் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மேலும் இக்காலப்பகுதியில் நாடங்காய் அறுவடை கிடைக்காததாலும் ஏனைய வகை மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாலும் நாடங்காயின் விலை அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.இதன் காரணமாக ஒரு கிலோ முருங்கைக்காயின் விலை 500 ரூபாவாக அதிகரித்துள்ளது.
எனினும் அம்பாறை மாவட்டத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் முழு நாடங்காய் 150 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
500 ரூபாவை தாண்டியது நாடங்காயின் விலை!!
Reviewed by Thanoshan
on
2/05/2024 11:40:00 AM
Rating: 5
Reviewed by Thanoshan
on
2/05/2024 11:40:00 AM
Rating: 5
.jpeg)
.jpeg)
.jpeg)
No comments