கொழும்பில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் -நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!
பொல்துவ சுற்றுவட்டத்திலிருந்து நாடாளுமன்ற வீதி வரை இன்று (24) நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் எரங்க குணசேகர உள்ளிட்ட தரப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொல்துவ சுற்றுவட்டம் முதல் நாடாளுமன்ற வீதி ஊடான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெலிக்கடை காவல்துறையினர் நீதிமன்றுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
இதற்கமைய குறித்த வீதிகளை பயன்படுத்துபவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் எந்தவித அமைதியற்ற செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் என கோட்டை பிரதான நீதவான் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொழும்பில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டம் -நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
No comments