7 மீனவர்களுக்கு மரண தண்டனை - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு!!
இலங்கை கடற்பரப்பில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் நோக்கில் 2012 ஆம் ஆண்டு இலங்கை கடற்பரப்பில் படகொன்றை கடத்தி அதிலிருந்த 3 மீனவர்களை கொலை செய்ததுடன் மேலும் சிலருக்கு காயத்தை ஏற்படுத்தியதாக சந்தேகநபர்கள் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பான நீண்ட விசாரணையை தொடர்ந்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகேவினால் இன்று குறித்த 7 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments