Column Left

Vettri

Breaking News

அட்டாளைச்சேனை அரபா வித்தியாலய டீ- சேர்ட் அறிமுக விழா : சிறப்பு விருந்தினர்களாக பைசல்காசிம் எம்.பியும், கிழக்கின் கேடயம் எஸ்.எம்.சபீஸும் !!














நூருல் ஹுதா உமர்  


கமு/அக்/அட்டாளைச்சேனை அரபா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் நடாத்தும் அரபா பிரீமியர் லீக் சுற்றுத் தொடருக்கான டீ- சேர்ட் அறிமுக நிகழ்வும் பழைய மாணவர்கள் சங்க சீருடை அறிமுகமும் பழைய மாணவர்கள் சங்க ஏற்பாட்டில் நடைபெற்றது. 


இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பைசல் காசிம் மற்றும் கிழக்கின் கேடய பிரதானியும் அக்கரைப்பற்று அனைதுப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவருமான எஸ்.எம்.சபீஸ் அவர்களும் கலந்துகொண்டனர். மேலும் அப்பாடசாலையின் பழைய மாணவர்களான கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில், பொத்துவில் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், அப்பாடசாலையின் அதிபர் மற்றும் முன்னாள் அதிபர்கள், கல்வி அதிகாரிகள், 300 கும் அதிகமான பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments

Subscribe Us