Column Left

Vettri

Breaking News

நாட்டில் மீண்டும் மின் தடையா ?





 பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை மாலை நாடு முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டிருந்தது. மின்னல் தாக்கம் காரணமாகவே இந்த மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்தநிலையில், குறித்த மின் விநியோக பாதையில் உடனடியான சீரமைப்பை மேற்கொள்வது உள்ளிட்ட சில பரிந்துரைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வழங்கியுள்ளது. ஆனபோதும் அந்த பரிந்துரைகள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமல் இருப்பது ஆபத்தானது என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்ப பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments