Column Left

Vettri

Breaking News

பொதுமக்கள் தினம் இன்று முதல் நடைமுறை!





 பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், இந்த தினம் அமுல்படுத்தப்படும் என்பதுடன், காலை 9 மணி முதல் பொதுமக்கள் தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நிலையங்கள் மற்றும் விசாரணை பிரிவுகளில், ஏற்படும் தேவையற்ற அசௌகரியங்கள், கால தாமதம் உள்ளிட்ட முறைப்பாடுகளை, இந்த பொதுமக்கள் தினத்தில் பதில் பொலிஸ்மா அதிபரிடம் முன்வைக்க முடியும் எனபொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அது தொடர்பில், உடனடியாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகவுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அறிவித்துள்ளார்.

No comments