கொழும்பில் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய பிரஜை கைது!!
கொழும்பில் மது போதையில் வாகனம் செலுத்திய பிரித்தானிய பிரஜை ஒருவரை கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த 18 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட பிரித்தானிய பிரஜை 22 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது குறித்த நபர் மது அருந்தியமை கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்த நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதையடுத்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். எனினும் மது அருந்தி வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் அவர் மீது குற்றஞ்சாட்டப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் நாட்டில் இடம்பெறும் விபத்து சம்பவங்களில் அதிகம் மதுபாவனையில் வாகனம் செலுத்துவதால் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments