Vettri

Breaking News

இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம் ; ஆட்சி மாற்றமில்லை - இந்துவிற்கு அனுரகுமார பேட்டி!1




 இலங்கைக்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம் ஆட்சி மாற்றமில்லை என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார் இந்து நாளிதழிற்கு இதனை அவர் தெரிவித்துள்ளார்

இது  குறித்து இந்து நாளிதழ் மேலும்தெரிவித்துள்ளதாவது.

கடந்த வருடம்  பேரழிவை  ஏற்படுத்திய நெருக்கடிக்கு பின்னர் இலங்கை  தனது கடும் பாதிப்பை ஏற்படுத்திய பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்காள முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை வலுவான எதிர்காலத்தி;ற்கு தேசிய விடுதலை இயக்கமே அவசியம் வெறுமனே ஆட்சிமாற்றம் மாத்திரம் போதாது  என ஜேவியின் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மக்களின் அதிக விருப்பத்திற்குரியவர் அனுரகுமார திசநாயக்க என கருத்து கணிப்புகள் காண்பிக்கின்ற நிலையில் தேசிய மக்கள் சக்தி அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. ஜேவிபி;யின் தலைமையலுவலகத்திலிருந்து இந்து நாளிதழிற்கு கருத்து தெரிவித்த 55 வயதுஅனுரகுமார திசநாயக்க அதிருப்தியடைந்துள்ள வாக்காளர்களிற்கு முன்வைப்பதற்கு தன்னிடம் என்ன உள்ளது என்பதை தெரிவித்தார். 2022 இல் ராஜபக்சாக்களை பதவியிலிருந்து அகற்றிய பின்னர்வாக்காளர்களிற்கு  தேர்தலில் வாக்களிப்பதற்கான முதலாவது சந்தர்ப்பம் அடுத்த வருடம் கிடைக்கவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலும் நாடாளுமன்ற தேர்தல்களும் அடுத்த வருடம் இடம்பெறவுள்ளது. உண்மையான பொருளாதார நெருக்கடிகளிற்கு ரணில்விக்கிரமசிங்க அரசாங்கம் தீர்வை காணவில்லை என திசநாயக்க தெரிவித்தார்.

அரசாங்கம் முன்வைத்து வரும் இலங்கையில் ஸ்திரதன்மை என்ற  கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்திய அவர் இலங்கை கடந்த இரண்டு வருடங்களாக தனது கடன்களை வழங்கவில்லை ,நாங்கள் டொலர்களை செலவிடவில்லை இதன் காரணமாகவே அரசாங்கத்தினால் எரிபொருளையும் எரிவாயுவையும் இறக்குமதி செய்ய முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

ஊழலும் பொருளாதார சமத்துவம் இன்மையும் நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ள அவர் நாட்டை அபிவிருத்தி செய்து மக்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்ககூடிய பொருளாதார திட்டமே அவசியம் என தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பொருhளாதர திட்டம் முதலீடுகள் மூலமான அதிகளவான பொருளாதார அபிவிருத்தி பொருளாதார செயற்பாடுகளி;ல் கலந்துகொள்வதற்கான அதிகளவு பரந்துபட்ட அளவு கலந்துகொள்வதற்கான வாய்ப்பு அபிவிருத்தியின் பலாபலன்கள் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பங்கிடப்படல் ஆகிய மூன்று அம்சங்களை கொண்டுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருட பொதுமக்கள் எழுச்சி பொருளாதார வீழ்ச்சிக்கு ராஜபக்சாக்களே  பிரதான காரணம் என குற்றம்சாட்டிய அதேவேளை நவம்பர் மாதம் இலங்கையின் உயர்நீதிமன்றம் கடந்த வருட பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு அரசாங்கமே காரணமாகயிருந்தது என குற்றம்சாட்டியதுடன் மக்களின் நம்பிக்கையை அரசாங்கம் சிதறடித்தது எனவும் குறிப்பிட்டுள்ளது.

திறந்த பொருளாதார கொள்கையே ஊழலிற்கு காரணம்

ஊழலின் அளவினை அனுரகுமாரதிசநாயக்க புரிந்துகொண்டுள்ளார், அவர் அதற்கு இலங்கையின் அரசியல் கலாச்சாரமும் திறந்த பொருளாதார கொள்கை 1977 இல் அறிமுகப்படுத்தப்பட்ட   பின்னர் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளும்  காரணம் என குற்றம்சாட்டினார்,இந்த கொள்கைகள் கொள்கைகளிற்கு முக்கியத்துவத்தை வழங்காமல் நிதிசார்ந்த நலன்களிற்கு மாத்திரம் முக்கியத்துவத்தை வழங்கின என அவர் குறிப்பிட்டார்.

தேசிய விடுதலை இயக்கம் அவசியம்

மேலும் இந்தியா போன்ற நாடுகள் போல இலங்கை நாட்டின் அபிவிருத்திக்குஅப்பால் தேசிய விடுதலை இயக்கமொன்றை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்ட அவர் எங்களிற்கு இதற்கான இரண்டு சந்தர்ப்பங்கள் காணப்பட்டன முதலாவது பிரிட்டிஸ் ஆட்சியாளர்கள் ஆட்சி புரிந்தவேளை ஆனால் நாங்கள் அவ்வேளை தோல்வியடைந்தோம்,என தெரிவித்ததுடன் பிரிட்டனின் ஆட்சியாளர்கள்இலங்கையிலிருந்து வெளியேறிய பின்னர் நாட்டை கட்டியெழுப்பும் திட்டம் முன்னெடுக்கப்பட்டவேளை இதற்கான வாய்ப்பு மீண்டும் காணப்பட்டதுஅவ்வேளையும் அவர்கள் அதனை செய்யவில்லை இது மூன்றாவது வாய்ப்பு சந்தர்ப்பம் என குறிப்பிட்டார்.

ஊழல் அரசியல் கலாச்சாரத்திலிருந்து நாட்டை மீட்பதற்கான இயக்கத்தின் அவசியம் குறித்து அவர்  தெரிவித்தார்.

கூட்டணிக்கு தயார் என தெரிவித்த அவர் அதேவேளை 75 வருடங்களாக நாட்டை ஆண்ட ஆளும் கட்சியோ எதிர்கட்சியோ உண்மையான சமூக மாற்றத்திற்கான கூட்டணியில் இடம்பெறுவதற்கு தகுதியுடையவர்களாக தங்களை நிரூபிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

2004 இல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தின் ஒரு பகுதியாக விளங்கியதை தவிர ஜேவிபிக்கு வேறு நிர்வாக அனுபவங்கள் காணப்படாத போதிலும் அனுரகுமார திசநாயக்க நம்பிக்கை கொண்டவராக காணப்பட்டார்.

நாடு கோரிநிற்க்கும் அமைப்புமுறை மாற்றத்திற்கு அரசியல் கட்சி அவசியமில்லை தேசிய விடுதலை இயக்கமே அவசியம் எனஅவர் தெரிவித்தார்.

இதனையே நாங்கள் நிறைவேற்ற முயல்கின்றோம் எங்கள் கட்சி ஜேவிபி எங்கள் இயக்கம் தேசிய மக்கள் சக்தி இதன் காரணமாகவே எங்களால் வெற்றி பெற முடியும் என நாங்கள் கருதுகின்றோம்,நாட்டின் சமகால தேவைகளை பூர்த்திசெய்ய முடியும் என கருதுகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச தொடர்புகளை விஸ்தரிக்கும் ஜேவிபி இந்த சூழமைவில் ஜேவிபி சர்வதேச தொடர்புகளை விஸ்தரித்துள்ளது.இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுடன் -இந்திய தூதரகம் உட்பட -தொடர்ச்சியான சந்திப்புகளை மேற்கொண்டுவருகின்றது, ஜேவிபி தனது சீன ஆதரவு - மேற்குலக எதிர்ப்பு கொள்கையிலிருந்து விலகியுள்ளதா என்ற கேள்விக்கு உலகம் மாறிவிட்டது எங்கள் கட்சியும் மாறிவிட்டது என  அனுரகுமார திசநாயக்க தெரிவித்தார்.

 

No comments