Column Left

Vettri

Breaking News

இரண்டு நாட்களுக்கு தபால் நிலையங்களுக்கு பூட்டு




 ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

குறித்த வேலை நிறுத்தப் போராட்டமானது, நுவரெலியா தபால் நிலையங்கள் அமைந்துள்ள கட்டிடங்களை விற்பனை செய்யும் தீர்மானத்திற்கு எதிராகவே மேற்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில்,  இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கம் மேலும் தெரிவித்துள்ளது

தீர்மானம் 

அத்தோடு, கண்டியில் உள்ள தபால் நிலையங்களும் விற்பனை செய்யத் தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இரண்டு நாட்களுக்கு தபால் நிலையங்களுக்கு பூட்டு | Post Office Strike Today Sri Lanka

நுவரெலியாவின் அடையாள சின்னமாக கடந்த 130 வருடங்களுக்கு மேலாக திகழும் நுவரெலியா தபால் நிலையத்தினை விற்பதற்கு எதிராக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் சிலரும் இன்று தபால் நிலையத்திற்கு முன்பாக கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பினை வெளிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments