Vettri

Breaking News

தபால் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டது!!





 தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் கீழ் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

தபால் சேவைகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் வர்த்தமானியை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

தபால் ஊழியர்கள் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையங்களை விற்பனை செய்யும் திட்டத்தை அரசாங்கம் கைவிடுமாறு கோரியே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து, இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

அறிவிக்கப்பட்ட போதிலும், பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பில் எவ்வித அடிப்படையும் இல்லை எனவும், தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்காமல் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்ற முயற்சிப்பதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தங்கள் திணைக்களத்திற்கு ஏற்படும் பாரிய இழப்பையே அதிகரிக்கும்.

எனவே பணிப்புறக்கணிப்பை கைவிட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்புமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments