Column Left

Vettri

Breaking News

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பி.ப. 1.00 மணிக்குப் பின் மழை - சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிக மழை




 

– வடக்கு, திருகோணமலையில் காலையிலும் மழை
– ஒரு சில பகுதிகளில் காலையில் பனிமூட்டம்

இன்றையதினம் (10) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம்காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்தமழை வீழ்ச்சிஎதிர்பார்க்கப்படுகின்றது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No comments

Subscribe Us