Column Left

Vettri

Breaking News

நியுயோர்க்கில் தீபாவளிக்கு பொது விடுமுறை




 அமெரிக்காவில் உள்ள நியுயோர்க் மாகாணத்தில் தீபாவளி அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான சட்டத்தில் ஆளுநர் கையெழுத்திட்டுள்ளார்.

இதன்படி தீபாவளி அன்று நியுயோர்க் மாகாணத்தில் உள்ள பாடசாலை, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நியுயோர்க்கில் பல்வேறு கலாசாரம் மற்றும் மதங்களை சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருவதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக இந்தியர்களின் விழாவான தீபாவளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உலகம் முழுவதும் உள்ள திருவிழாக்களை அமெரிக்கர்கள் கற்றுக்கொண்டு கொண்டாடுவதற்கு வாய்ப்பாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க் மாகாணத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் கல்வி கற்று வரும் நிலையில் உலகம் முழுவதும் உள்ள திருவிழாக்களை அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நியுயோர்க் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

நியுயோர்க்கில் தீபாவளிக்கு பொது விடுமுறை : கையெழுத்திட்டார் ஆளுநர் | A Holiday To Diwali In Newyork

இந்த மசோதாவை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெனிஃபர் ராஜ்குமார் என்பவர் தான் முன்னெடுத்தார் என்பதும் தற்போது ஆளுநரின் ஒப்புதலை பெற்று சட்டமாக மாறி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments