எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பிரபலங்கள் வருத்தம்
சென்னை: எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போதைய சூழ்நிலையில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர். சீரியல் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் மாரிமுத்துவின் இறப்பு குறித்த அதிர்ச்சியில் மீள முடியாமல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரன் ஆக பிரபலம் அடைந்த மாரிமுத்து திடீரென்று இன்று அதிகாலை டப்பிங் பேசுவதற்காக சென்றிருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார். இது குறித்து அந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் வருத்தத்தோடு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இவருக்கு இந்த நிலைமை வரும் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இவருடைய குடும்பத்தினருக்கு நாங்கள் எப்படித்தான் ஆறுதல் சொல்ல போகிறோம் என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதுபோல அரசியல் பிரமுகராக இருக்கும் சுப.வி இந்த அதிர்ச்சியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் நான் எதிர்நீச்சல் சீரியல் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று நான் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எழுதி இருந்தேன். அதில் குணசேகரன் ஆக மாரிமுத்து அந்த அளவிற்கு நடித்து இருப்பார். அவருடைய நடிப்பை குறித்து நான் பாராட்டியதற்கு எனக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருடைய இறப்பு இப்படியாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கண்ணீரோடு பேசி இருக்கிறார். சில தினங்களுக்கு முன்புதான் மாரிமுத்து தன்னுடைய பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி தன்னோடு நடித்த பிரபலங்கள் பலருக்கும் சாப்பாடு போட்டு இருந்தார். இந்த நிலையில் சில தினங்களுக்குள் இவருக்கு எந்த நிலைமையில் ஆக வேண்டும் என்று இவரோடு சீரியலில் தம்பியாக நடிக்கும் கமலேஷ் அதாவது சீரியலில் ஞானம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.
தொடர்ச்சியாக இந்த தகவல் தெரிந்ததும், அதிகமான ரசிகர்களும் சீரியல் பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments