ஒக்டோபர் முதல் குறுஞ் செய்தியூடாக நீர் கட்டண அறிவிப்பு
அடுத்த மாதம் முதல் இலங்கையின் சில பகுதிகளில் உள்ள நுகர்வோருக்கு குறுஞ்செய்தி மூலமாக மாதாந்த கட்டணங்களை அனுப்புவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, கொழும்பு தெற்கு, கண்டி தெற்கு, பொலன்னறுவை மற்றும் திருகோணமலையில் உள்ளேருக்கு நீர் கட்டணங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
2024 ஜனவரி முதலாம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தேசிய நீர் வாழக்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது
No comments