Vettri

Breaking News

பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை




 கொழும்பு களனி பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவமானது நேற்று இரவு (07) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த மாணவன் பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக கிரிபத்கொட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 22 வயதுடைய மாணவர்

களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி கற்கும் 22 வயதுடைய மாணவரே இவ்வாறு உயிரிழந்தாக தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழக மாணவன் திடீரென உயிரிழப்பு: தீவிர விசாரணையில் காவல்துறை | Kelaniya Univercity Student Death

கரந்தெனிய பிரதேசத்தில் வசிக்கும் அகில இந்திரசேன என்ற இளைஞரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments