----VETTRI NEWS.COM---- பக்கசார்பற்ற நம்பகத்தன்மையான தகவல்கள் மக்கள் முன்...

Sunday, September 3, 2023

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை: விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை

 கடந்த இரு நாட்களாக நாட்டின் பல பகுதிகளில சீரற்ற காலநிலை நிலவி வருகிறமையால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்தில் பெய்து வரும் கடும் மழையினால் ஜிங் கங்கை மற்றும் நில்வல கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறை மாவட்டத்தின் அக்குரஸ்ஸ உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நில்வல ஆறு நிரம்பி வழிவதாக மாத்தறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

அபாய முன்னெச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை: விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை | Weather Today Sri Lanka

காலி மாவட்டத்திலும் அடை மழை காரணமாக ஜிங் கங்கையின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது.

இதேவேளை நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

Share:

0 comments:

Post a Comment

About

Blog Archive